ஆஸ்திரேலியாவில் குயின்ஸ் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள், முடக்கத்தானில் உள்ள ‘தாலைட்ஸ்’ என்ற ரசாயனம் குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைச்சிருக்கிறதை கண்டுபிடிச்சிருக்காங்க. மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைச்சு, சிறுநீரகத்துக்கு எடுத்துட்டுப் போயிடும். சிறுநீரகம் இதை வெளியேற்றும்போது, சோடியத்தையும், பொட்டாஷியத்தையும் நம் உடம்பிலேயே விட்டுவிடுமாம். இது, ஒருமிக முக்கிய இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துமாம். இதனால், உடல் சோர்வு ஏற்படாது. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறதாம்.’
‘முடக்கத்தான் கீரையை எப்படி சாப்பிடணும் பாட்டி?’
”கீரையைத் தண்ணீர்ல போட்டுக் கொதிக்க வைச்சா, அதுல இருக்கிற மருத்துவ சத்துக்கள் அழிஞ்சிடும். பொடியா நறுக்கி, தோசை மாவோட கலந்து, தோசையா செஞ்சு சாப்பிடலாம்.’
‘மூட்டுவலி இருக்கிறவங்களுக்கு மலச்சிக்கல் இருக்கும்னு சொல்றாங்களே..?’
‘அப்படி இல்லை. ஆனால், மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், அதை முதல்ல சரி செய்யவேண்டியது ரொம்ப அவசியம். ‘விரேசனத்தால் வாதம் தாழும்’னு ஒரு சித்த மருத்துவ மொழி கூட இருக்கு.’
‘விரேசனம்னா என்ன பாட்டி?’
‘பேதி உண்டாக்க மருந்து கொடுப்பது. நாடி, உடல் வன்மை பார்த்து விளக்கெண்ணெயில் ஆரம்பித்து, பல வகை பேதி மருந்துகளை சித்த மருத்துவர்கள் கொடுப்பாங்க. அதை ஒரு நாள் எடுத்துக்கிட்டா, நல்லா 7 – 10 தடவை பேதி ஆகி, உடலின் வாதத் தன்மை குறைஞ்சிடும். அதுக்குப் பிறகு தகுந்த வைத்தியம் பார்த்துக்கிட்டா, மூட்டுவலி சீக்கிரத்திலேயே குறையும். ஆனால், மருத்துவரோட ஆலோசனை இல்லாமல் இதைச் சாப்பிடக் கூடாது.”
”நீ, தினமும் ராத்திரி, ஒரு பொடியை பால்ல போட்டு சாப்பிடுவியே… அது எதுக்கு பாட்டி?”
‘அமுக்கராங்கிழங்கு பொடி. பாலில் வேக வைச்சு தூளாக்கிய பொடி. இந்தப் பொடியைச் சாப்பிட்டால், மூட்டுகளுக்கு இடையே இருக்கிற அழற்சி நீங்கி வலியும் குறையும். கூடவே நொச்சி, தழுதாழை, ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெய் அல்லது, வாத கேசரி தைலத்தில் நல்லா வதக்கி, மூட்டுக்கு ஒத்தடம் கொடுத்தாலும் வலி சீக்கிரமே போயிடும்.
கால் வலியோட வீக்கம் இருந்தால், முருங்கை இலை, தேங்காய் துருவல், வலம்புரிக்காய், ஓமம், நொச்சித்தழை, ஆமணக்கு இலை, தழுதாழை, இதையெல்லாம் ஒரு காடா துணியில் பொட்டலமாக் கட்டி ஒரு கடாயில், நாராயணத் தைலத்தை லேசாக இளஞ்சூடாக்கி, அதில் இந்த பொட்டலத்தைப் போட்டு, அந்த எண்ணெயில் லேசாய்ப் பிரட்டணும். அதை வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலியும் போகும்; வீக்கமும் மறையும்.
ஆவாரை இலை, வேலிப்பருத்தி இலை இரண்டையும் தூளாக்கி, முட்டை வெள்ளைக்கரு (சைவமா இருந்தால் உளுத்தமாவு) கலந்து, மூட்டுல பத்து போட்டு அடுத்தநாள் கழுவினால் வீக்கம் மறைஞ்சிடும். ‘ஃப்ரோஸன் ஷோல்டர்’ என பாடாய்ப் படுத்தும் தோள் மூட்டில் வரும் வலிக்குக் கூட இந்த பத்துதான் பெஸ்ட்.’

No comments:
Post a Comment