Monday, 4 January 2016

நேச்சுரல் கலரிங்

மருதாணி, செம்பருத்தி இலை, கறிவேப்பிலை, பெரிய நெல்லிக்காய் இதைஎல்ல்லாம் அரைத்து  நல்லெண்ணையில் மிக்ஸ் பண்ணி இரவு வெசிரணும். கருப்பு கலர் வர கொட்டை பாக்குத் தூள் சேர்க்கிறது அவசியம். கலர் ப்ரௌவ்னா வரணும்னா பாக்குத்தூளுக்கு பதிலாக டீத்தூள் போடுங்க. காலையில் எழுந்ததும் ஊறி இருக்குற இந்த கலவையில் பீட்ரூட் சாறு சேருங்க. இதை எடுத்து டை மாதிரி பூசுங்க.


நாட்டு மருந்து கடையில கிடைக்கிற கரிபோளத்தை வாங்கி நெல்லிக்காய் சேர்த்து அரைத்து தலையில் தடவ நரைத்த கூந்தல் கருப்பாய்த் தெரியும். நேச்சுரல் டை இது.

நெல்லிக்காய், மருதாணி, கரிசலாங்கண்ணி, அவுரி இலை  இந்த நான்கையும் அரைத்து கூழாக்கி இரும்பு வாணலியில் உள்பக்கமாக தடவி இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் வைத்தால் நன்கு காய்ந்து பொடியா உதிரும். அதை எடுத்து தண்ணியில குழைச்சி தலையில் தடவ கருமையாய் தெரியும்.

பாட்டி வைத்தியம் 'குமுதம்சினேகிதி

No comments:

Post a Comment