சரிவர சுதமில்லாததால் சிலருக்கு தோல் அரிப்பு, தோல் வறட்சி, வியர்வையில் நாற்றம் இருக்கும். அவங்க கற்றாழைச் சோற்றில் கஸ்தூரி மஞ்சள் கலந்து குளிக்கலாம். மற்ற தோல் பிரச்சனைகளையும் இது சரி செய்யும்.
பயத்த மாவு + கஸ்தூரி மஞ்சள் + கொஞ்சமா வேப்பிலை + ஆவாரம்பூ + குப்பைமேனி இலை கலந்து காய வைத்து திரிச்சுக்கோங்க. வாரத்திற்கு இருமுறை நல்லெண்ணெய் தேய்த்து உடம்புல நல்லா ஊற விடுங்க. அப்புறம் மேலே சொன்ன பொடியை தேய்ச்சு குளிக்க, தோல் பிரச்சினை சரியாகும். தொடர்ந்து மோர் குடிச்சிட்டே வந்தாலும் சருமம் ஜொலிக்கும்.
- பாட்டி வைத்தியம் 'குமுதம்' சினேகிதி
No comments:
Post a Comment